இங்கிலாந்து நாட்டில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் கொரோனோ தொற்று கடந்த மாதத்திலிருந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாக இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கு தேசிய சுகாதார சேவைகள் அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. அதன்படி இரண்டாம் டோஸ் தடுப்பூசி அளிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்த சிறுவர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.