சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 49 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் எஸ்.பி. கோ.சஷாங்க்சாய் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 49 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 1078 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.