சென்னையில் தெருவோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த மண்டல அளவில் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி இணை ஆணையர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தெருவோர வியாபாரிகள் எண்ணிக்கையை கணக்கிடுவது, அதன் அடிப்படையில் விற்பனை மண்டலங்கள் அமைப்பது தொடர்பாகவும்,
தெருவோர வியாபாரிகள் இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு பகுதியிலும் தெருவோர விற்பனை மண்டலங்களை கண்டறிந்து தெருவோர வியாபாரிகளுக்கு பாதிப்பில்லாமல் இடமாற்றம் செய்ய மண்டல அளவில் குழு அமைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.