Categories
உலக செய்திகள்

“எங்கக்கிட்ட ஆதாரம் இருக்கு…. இது தா உங்க நோக்கம்”…. ரஷ்யாவை விளாசிய உக்ரைன்….!!!

உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது இணைய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் உள்ளது என்று கூறியிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் அரசாங்கத்திற்குரிய முக்கியமான இணையதளங்கள் சமீபத்தில் முடக்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்றும், அந்நாடு உக்ரைன் மீது படையெடுக்க தயார் நிலையில் உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில் உக்ரைன் அரசு, சமூகத்தை அச்சுறுத்துவது மற்றும் பொருளாதாரத்தை சீரழிப்பது தான் ரஷ்ய நாட்டின் நோக்கமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறது. எனினும், ரஷ்யா உக்ரைன் நாட்டின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |