Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: நிம்மதி செய்தி…. ஆய்வில் வெளிவந்த சூப்பர் தகவல்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா 3-ம் அலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தினமும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் தொடர்பாக ஆய்வில் நல்ல தகவல் கிடைத்துள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதும் அல்லது முன்பாகவே கொரோனா பாதிப்புக்குள்ளானதும், பல மடங்கு உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தருகிறதோ இல்லையோ, ஆனால், ஒமைக்ரான் பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமானது 4 சதவீதத்துக்கும் கீழ்தான் இருக்கிறது.

புது தில்லியிலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனை சார்பாக, நாட்டில் முதன் முறையாக ஒமைக்ரான் பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் இவ்வாறு கூறுகின்றன. மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளில், தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாள்களில், அதாவது டிசம்பர் மாதத்திலேயே தில்லியில் ஒமைக்ரான் பரவல் சமூகப் பரவலாக மாறி இருந்தது. அதே சமயம் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து விமானங்களுக்கு தடை விதித்தது ஆகிய நடவடிக்கைகளால் இது கட்டுப்படுத்தப்பட்டது.

தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மருத்துவ மையத்துடன் தொடர்புடைய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், தில்லியின் 5 மாவட்டங்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் 264 மாதிரிகள் மரபணு மாற்ற வரிசைமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவற்றில் 82 நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு கடந்த ஆண்டு கோடைக் காலத்தில் 2-ம் அலை உருவாகக் காரணமான டெல்டா வகை வைரஸ் பாதித்து இருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அளவு சிறியதாக இருந்த போதிலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பு கடுமையாக அதிகரித்து இருந்ததை உறுதி செய்துள்ளது.

மேலும், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 82 பேர் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். அனைவருமே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். இவர்களில் 3 நபர்கள்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்குச் சென்றனர். அவர்கள் 3 பேருக்கும் நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய இணை நோய்கள் இருந்தது. ஆனால் யாருக்குமே ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்படவில்லை. அதே சமயம் கொரோனா 2-ம் அலையின்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை இருப்போர் விகிதம் 20-23% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |