ஈரோடு மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புகுந்த மண்ணுளிப்பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் காவல்துறையினர் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நகாவல்துறையினர் மோப்பநாய் பிரிவு பகுதிகளில் இருந்து வெளியேறிய 5 அடி நீளம் கொண்ட மண்ணுள்ளிபாம்பு அனைத்து மகளிர் காவல்நிலையம் நோக்கி சென்றது. இதனைக்கண்ட காவலர்கள் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். பின் தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.