ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசியை எதிர்த்து, வலது சாரி அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டில் மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எதிர்த்து போராடி வருகிறார்கள். மேலும், தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்துவது, சர்வாதிகார ஆட்சிக்கு சமம் என்றும் கோஷம் எழுப்புகிறார்கள்.
அதே சமயத்தில், பூஸ்டர் தவணை தடுப்பூசி வரை மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நான்காம் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு, மக்களை அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.