உலகம் முழுவதிலும் பல ஆயிரம் கிளைகளை கொண்ட பீட்சா கடையான டோமினோஸ், ஜூபிலண்ட் ஃபுட் வொர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் உணவகமாகும். இந்த உணவகங்களில் பீட்சாக்களை அட்டையில் அடைத்து நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் பங்கஜ் எனும் வழக்கறிஞர் சண்டிகரில் உள்ள டோமினோஸ் உணவகத்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது பைக்கு 14 ரூபாய் கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கடை மேலாளரிடம் கேள்வியெழுப்பிய பங்கஜுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பின்னர், இது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்தை நாடிய பங்கஜ் தனது தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளார்.
விசாரணையின் முடிவில், மனரீதியாக வாடிக்கையாளரின் மன உளைச்சலுக்கு 100 ரூபாயும், நீதிமன்ற செலவுகளுக்கு 500 ரூபாயும், நுகர்வோர் ஆணையத்துக்கு 10ஆயிரம் ரூபாயும், அரசின் பிஜிஐ நோயாளிகள் நல நிதிக்கு 4 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் அபராத தொகையாக கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.