தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூரில் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஷம் அருந்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராதாகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.