சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கனடா நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சல் மூலமாகத்தான் தங்கள் நாட்டிற்குள் ஒமிக்ரான் பரவியது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சீனாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள், கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு பார்சலின் மேற்பரப்பு, அதிலிருந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களில் கொரோனா இருந்தது என்று கூறியிருக்கிறார்கள். அதாவது கனடா நாட்டிலிருந்து கடந்த 11-ம் தேதியன்று சீனாவை சேர்ந்த ஒரு நபருக்கு பார்சல் வந்திருக்கிறது.
அந்த நபருக்கு கடந்த 15ஆம் தேதி அன்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த பார்சல் கடந்த 7-ஆம் தேதியன்று கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.