தொல்லியல் துறையினர் செய்த ஆய்வில் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பகுதியில் பாறை ஓவியங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன், தருனேஸ்வரன் உள்ளிட்ட பலர் ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது. அதில் 4000 ஆண்டுகளுக்கு பழமையான காவி நிறத்தில் பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் மனித வடிவிலான ஓவியம் ஒன்று முழுமையாக கிடைத்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்.
மேலும் ஆதிமனிதன் வாழ்ந்த குகை மற்றும் மருத்துவ குழிகளும் கிடைத்துள்ளது. இங்கு சமணர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக பாறையில் வரையறுக்கப்பட்ட ஓவியங்கள் அருகில் உள்ள மலை மூலிகைகளால் எழுதப்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஓவியங்கள் மலை மற்றும் வெளியில் களங்களில் சேதம் அடையாமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர் மீனாட்சிசுந்தரம் கூறியுள்ளார்.