Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“வயசானவங்க பாதுகாப்பாக வீட்ல இருங்க”… ரஜினியை கலாய்த்த உதயநிதி..!!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் அதனைப் பொதுவாக வன்முறை என ரஜினி கருத்து பதிவு செய்ததற்கு, உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நடிகர் ரஜினி, ‘ தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது ‘ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும். #Emergency2019 #IndiaAgainstCAA எனப் பதிவிட்டுள்ளார்.

‘வன்முறை’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு வசதியான, வயதான பெரியவர்கள் என ரஜினியை குத்திக்காட்டியிருப்பதாக ரஜினிக்கு ஆதரவாக ஒரு குழுவும், உதயநிதிக்கு ஆதரவாக மற்றொரு குழுவும் ட்விட்டரில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |