மது அருந்த பணம் கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள முத்துச்செல்லாபுரம் கிராமத்தில் வேல்முருகன்(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வேல்முருகன் ராஜாக்கல்பட்டி பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பாலபச்சேரியை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் வேல்முருகனிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
அதற்கு வேல்முருகன் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கண்ணன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை மிரட்டி உள்ளார். இதனையடுத்து முருகனிடம் இருந்த 500 ரூபாயை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் உடனடியாக பார்த்திபனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.