Categories
தேசிய செய்திகள்

இலவச சிலிண்டர் வாங்கணுமா?…. உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு “உஜ்வாலா யோஜனா திட்டமானது” 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2021 முதல் 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் சிலிண்டர் இணைப்புகளானது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான மானிய உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் இந்த இலவச சிலிண்டரானது அனைவருக்கும் கிடைக்காது. வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பமாக இருக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். எல்பிஜி இணைப்பு முன்பே இருக்கக் கூடாது. அதாவது இதேபோன்ற வேறு திட்டங்களின் கீழ் எந்த நன்மையையும் பெற்றிருக்கக்கூடாது. இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவத்தினை அருகிலுள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் இருந்து பெறலாம்.

மேலும் https://www.pmujjwalayojana.com/ என்ற வெப்சைட்டில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். படிவத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்வதோடு, அதை அருகில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பமும், வழங்கப்பட்ட ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு எல்பிஜி இணைப்பு வழங்கப்படும். நகராட்சித் தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பம் என்ற சான்றிதழ் முக்கியம் ஆகும். சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, புகைப்பட அடையாள ஆதாரம், முகவரி ஆதாரம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் (அ) ஜன் தன் வங்கிக் கணக்கின் விவரங்கள் தேவைப்படும்.

Categories

Tech |