குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் நடிகர்களை பங்கேற்க முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23ஆம் தேதி திமுக பேரணி நடத்த இருக்கின்றது. இதற்காக கூட்டணி கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பேரணியில் பங்கேற்க நடிகர்களுக்கு திமுக சார்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னையில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி விவசாய அமைப்புகள் , வணிகர் சங்கங்கள் , திரைத்துறையைச் சார்ந்த சங்கங்கள் , ஆசிரியர் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கட்சி எல்லைகளைக் கடந்து , மதம் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து போராட்டத்தை முன் வைத்து ஜனநாயக குரலை எழுப்ப வாரீர் திமுக தலைவர் அந்த அழைப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.