Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற தம்பதியினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள காமராஜர் நகரில் நிக்சன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜாக்குலின் பிரபா என்றார் மகள் இருக்கிறாள். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம் பேரையூரிலுள்ள உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அரசு பேருந்து ஒன்று நிக்சன் பிரபாகரன் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுநரான சந்தானம் என்பவர் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |