Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. கொரோனா சிகிச்சைக்கு ரூ.5 லட்சம் நிதி…. எப்படி பெறுவது?….!!!!

இந்தியாவில் மீண்டும் தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா பாதிப்பு லட்சக்கணக்கான மக்களை பாதித்தது. அப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பல பேர் உயிரிழந்தனர். இதனிடையில் கொரோனா சிகிச்சைக்கே லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் செலவிட வேண்டியதாக இருந்தது.

தற்போது கொரொன பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் உஷாராகியுள்ளனர். இதுபோன்ற நிலையில் காப்பீடு செய்தவர்களுக்கு உதவி கிடைக்கும். ஆனால் காப்பீடு எதுவும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்..? திடீரென்று ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு என்ன செய்வது…? என்ற கவலை வேண்டாம். அவர்களுக்காகவே இந்தியாவின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா( SBI) சிறப்புக் கடன் வழங்குகிறது. SBI “கவாச் பெர்சனல் லோன்” எனும் பெயரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதம் மட்டுமே ஆகும்.

மேலும் கடனைத் திருப்பிச் செலுத்த 3 மாத சலுகைக் காலமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையில் கடன் பெறலாம். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் தகுதியைப் பொறுத்து கடன் வழங்கப்படும்.
இந்த கடனைப் பெற்று கொள்வதற்கு SBI வங்கிக் கிளைக்குச் சென்று விண்ணப்பம் செய்யலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்க முடியும். இந்த கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது. பெனால்டி ஆகிய கூடுதல் செலவுகள் எதுவும் இல்லை. இக்கடனைப் பெறுவதற்கு பிற ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரிப்போர்ட் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |