Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு…. குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் அவதி….!!

போடியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழையினால் கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி மற்றும் குரங்கணி பகுதியில் சுமார் 2 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இதனால் பிள்ளையார்பட்டி தடுப்பணையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனையடுத்து போடி பகுதியில் பெய்த கனமழையினால் சாலையோர கழிவுநீர் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மழைநீருடன் கலந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |