Categories
மாநில செய்திகள்

அடப்பாவிகளா!…. கொடுத்ததே 17 பொருள்…. அதிலும் வெள்ளத்தில் நோயாளியின் ஊசி…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பிலுள்ள பொருட்கள் தரமானதாக இல்லை என்று தொடர்ந்து புகார்கள் வருவதையடுத்து, தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் கடந்த வாரத்திற்கு முன்பு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கியுள்ளார். அந்தத் தொகுப்பில் அவருக்கு 17 பொருட்கள் மட்டுமே கடை ஊழியர் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

தனக்கு கிடைத்த பொருள்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற ஜெயக்குமாரி வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். தொடர்ந்து ஜனவரி 15-ஆம் தேதி இன்று காலையில் பொங்கல் வைப்பதற்காக ரேஷன் கடையில் கொடுத்த மண்டவெல்லத்தை எடுத்துள்ளார். அப்போது வெல்லக்கட்டியில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊசி போட பயன்படுத்தும் சிரஞ்சி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்ற ஜெயக்குமாரி, ஊராட்சி மன்ற தலைவரிடம் கூறியுள்ளார். அது உண்மை என்பதை அறிந்து கொள்வதற்காக ஊராட்சிமன்ற ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உணவு பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டவழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை வந்து பார்வையிடவில்லை என்று ஜெயக்குமாரி குற்றம்சாட்டியுள்ளார். ஏற்கனவே திருத்தணி அருகே புளி பொட்டலத்தில் இறந்த நிலையில் பள்ளி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது குமரியில் வெல்லத்தில் ஊசியிருந்த சம்பவம் மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பல தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Categories

Tech |