Categories
உலக செய்திகள்

மக்களே…! ஃபர்ஸ்ட் “மெசேஜ் அனுப்புவாங்க”… அப்பவே உஷாராயிருங்க… இல்லனா கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த அரசு….!!

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாவிடில் அபராதம் விதிக்கப்படும் என்ற சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியான மசோதா ஒன்றை நிறைவேற்ற தீர்மானம் செய்துள்ளது.

அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தொடர்பான தடுப்பூசியை கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டுமென்ற மசோதா வாகும். இந்த மசோதாவின்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நபர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் செய்தி அனுப்புவார்கள்.

இந்த செய்தியை பொருட்படுத்தாமல் தடுப்பூசி பெற்றுக் கொள்ள மறுக்கும் 18 வயது மேற்பட்ட பொதுமக்களுக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.

Categories

Tech |