பிரபல தனியார் யூடுப் சேன்னலில் பேட்டியளித்த புகழேந்தி, நான் அ.இ.அண்ணா திமுகவில் இருந்து காரணமே இல்லாமல் அநியாயமாக நீக்கப்பட்டது புரியாத புதிர். பாமகவை எதிர்த்துப் பேசினேன் என்பது ஒரு பெரிய குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொன்னேன், இவர்கள் எடுத்தார்கள், நான் கவலைப்படவில்லை. முதல் முதலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கிய பின்னால், குற்றவாளி நம்பர் 1 பழனிசாமி, குற்றவாளி நம்பர் 2 ஒ.பன்னீர் செல்வம் இந்த 2 பேரும் குற்றவாளிகள் ஆனது நான் தொடுத்த வழக்கில்…
என்னை நீக்கிய முறை சரியில்லை, தவறான ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறார்கள் என்று கிரிமினல் வழக்கை தொடர்ந்து, அந்த வழக்கு விசாரித்த எம்பிக்களுக்கு, எம்எல்ஏக்களுக்கு உரிய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நீதியை, நீதிதேவதை வழங்கினார்கள். அதிலே இவர்கள் குற்றவாளி ஆக்கப்பட்டு, இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் போய் நிற்கிறது, விவாதம் முடிந்தது ஆனால் இன்றுவரை அதற்கு தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
ஆகவே வெளியில் வந்தபிறகு குற்றவாளிகள் இப்ப நான் தான் என்று சொல்லுவார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசு அவர்களை குற்றவாளி ஆகவில்லை. குற்றவாளியாக்கியது புகழேந்தி. அந்த காரியத்தை நான் சரியாக செய்து விட்டேன். என்னை எடுத்ததற்கு அவர்கள் வாழ்நாளில் குற்றவாளி என்கின்ற A1 குற்றவாளி, A2 குற்றவாளி என்பதை சுமந்து திரிகிறார்கள் என்பதுதான் உண்மை என தெரிவித்தார்.