ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 2 மற்றும் 4 மணிக்கு அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
Categories