Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை மாநகராட்சி… பட்டியல் இனத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு..!!

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கு 32 வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  பட்டியலின பிரிவுக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பட்டியலினத்தவருக்கு மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, 32 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின பெண்களுக்கும், 16 வார்டுகள் பட்டியலின பொதுப் பிரிவுக்கு (ஆண்/பெண்) ஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தம் உள்ள 200 வார்டுகளில் 84 வார்டுகள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி முதன்முறையாக பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |