Categories
உலக செய்திகள்

“கொரோனா”…. 10 நாட்கள் தனிமை போதாதா?…. ஆய்வில் அறியப்பட்ட உண்மை….!!!!

உலகில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்களால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 10-ல் ஒருவருக்கு 10 நாட்களுக்குப் பிறகு தொற்றின் பாதிப்பு நீடித்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனையில் தொற்று உறுதியான 176 பேரின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்ததன் பிறகே வைரஸின் நிலை தெரியவந்துள்ளது.

அதன்படி பாசிட்டிவ் மாதிரிகளை ஆர்என்ஏ முறையில் புதிய சோதனையில் தனிமைப்படுத்தப்பட்ட 10 நாட்களுக்கு மேலாக நீடித்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 13 சதவீத பேரின் உடலில் குறிப்பிட்ட காலவரையறைக்கு மேல் மருந்து உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா  வைரஸ் போய் விட்டது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏனென்றால் இப்படி வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் பட்சத்தின் காரணமாக பலருக்கும் பரவி ஆபத்து ஏற்படக் கூடும் என்று எக்ஸிடர் மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் லோர்னா ஹாரிஸ் கூறியுள்ளார். ஆகவே 10 நாட்கள் தனிப்படுத்தும் முறை போதுமானதாக இருக்காது என்று ஆய்வு முடிவு மூலம் அறியப்படுகிறது.

Categories

Tech |