தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கும் முகாம்களில் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் 15-18 வயது வரையுள்ள சிறார்களுக்கு முதல் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும். தமிழகத்தில் இதுவரை 92, 522 நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜனவரி 22ஆம் தேதி வழக்கமான சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.