Categories
தேசிய செய்திகள்

முதலீடு செய்யணுமா?…. இதுதான் சரியான காலம்…. பிரதமர் நரேந்திர மோடி…..!!!!

அடுத்த 25 வருடங்களுக்கு நிலையான வளர்ச்சி இருப்பதால் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதுவே சரியான காலம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்திலுள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. காணொலி மூலமாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் பிரதமரான நரேந்திர மோடி பேசியபோது, “தொழில் செய்ய தடையாக இருந்தவை தன் ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது. மேலும் லைசென்ஸ் முறை ஒழிக்கப்பட்டு, கார்ப்பரேட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 25 வருடங்களுக்கு இந்தியாவில் நிலையான, நம்பகமான வளர்ச்சி இருக்கும் என்பதால் முதலீடு செய்வதற்கு இதுவே தகுந்த நேரம் என்று உலக தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியாவானது சீரான பொருளாதார வளர்ச்சியோடு மிகுந்த எச்சரிக்கையுடன் கொரோனா அலையை எதிர்கொண்டு வருகிறது. கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணம் குறித்த சவால்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்” எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |