பியார் கா பஞ்ச்நாமா, லைஃப் சஹி ஹை உள்ளிட்ட படங்களை இயக்கிய லவ் ரஞ்சன் தற்போது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிக்கவிருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லவ் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் அங்கூர் கர்க் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் 2021 மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு பணிகள் ஜனவரிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Luv Ranjan’s next to star Ranbir Kapoor & Shraddha Kapoor. Produced by Luv Ranjan and Ankur Garg, the film will release on 26th March 2021.
— Luv Films (@LuvFilms) December 20, 2019