Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பாக்கியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் அண்ணா நகர் முதல் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதில் பாக்கியதாஸ் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சமுதாய பெயர் பலகையை அகற்றினார்கள். இந்நிலையில் சாலை பணி முடிவடைந்ததும் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். அதற்கு பாக்கியதாஸ் மற்றும் அவரது மகன் கார்த்திக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில் மனமுடைந்த பாக்கியதாஸ் கடந்த மாதம் 30-ஆம் தேதி தனது வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பாக்கியதாசை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாக்கியதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |