Categories
தேசிய செய்திகள்

“மாந்திரீக வேலையால் வந்த வினை”…. மாமா-அத்தையை கொன்று எரித்த நபர்…. பெரும் பரபரப்பு….!!!!!

மத்தியபிரதேச மாநிலமான  ஜபல்பூர் மாவட்டம் சவ்ராய் கிராமத்தில் தயராம் குலஸ்ட் (27) வசித்து வருகிறார். இவரது சகோதரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையில் சகோதரனின் தற்கொலைக்கு தன்னுடைய மாமா-அத்தை உறவு முறையான சுமர் சிங் குலஸ்ட் (60), அவரது மனைவி ஷியாபாய் (55) ஆகிய இருவருமே காரணம் என்று தயராம் நினைத்துள்ளார். அதாவது மாந்திரீக வேலைகளில் ஈடுபடும் மாமா -அத்தை தான் தன் சகோதரன் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்று நினைத்துள்ளார். அவர்கள் செய்த மாந்திரீக வேலையாலையே தனது சகோதரன் தற்கொலை செய்து கொண்டார் என்று தயராம் கருதியுள்ளார்.
இந்த நிலையில் சவ்ராய் கிராமத்திலுள்ள தனது மாமாவின் வீட்டிற்கு தயராம் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த சுமர் சிங் குலஸ்ட் மற்றும் அவரது மனைவி ஷியாபாயை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தயராம் தாக்கியுள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்பின் தயராம் தான் செய்த இரட்டை கொலையை மறைப்பதற்காக வீட்டிற்கு தீவைத்துவிட்டு, அதனால் இருவரும் உடல் கருகி உயிரிழந்தது போன்று சதி செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சுமர் சிங் குலஸ்ட் மற்றும் ஷியாபாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைத்தனர். அதில் கணவன்- மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் ஹினொடியா என்ற கிராமத்தில் பதுங்கி இருந்த தயராம் குலஸ்டை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தன் சகோதரனின் தற்கொலைக்கு மாமா சுமர் சிங் குலஸ்டிசும் அவரது மனைவி ஷியாபாயுமே காரணம் என்று நினைத்ததாகவும், அதனால் அவர்கள் இருவரையும் கொலை செய்ததாகவும் தயராம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின் தயராம் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டார்.

Categories

Tech |