Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனையுடன் ஏற்பட்ட தொடர்பு…. வாலிபரின் ஆபாச வீடியோ…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் 29 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, நான் காந்திபுரம் 100 அடி சாலையில் இருக்கும் பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது நெருங்கிய நண்பரின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. எனது நண்பர் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது மனைவியுடன் பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளேன். இது குறித்து அறிந்த எனது நண்பர் எங்கள் இருவரையும் கண்டித்த போதும் நாங்கள் தொடர்ந்து பழகி வந்தோம்.

இந்நிலையில் நான் வீட்டில் தனியாக இருந்தபோது எனது நண்பர் சிலருடன் அங்கு வந்து என்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து 2 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என நண்பர் மிரட்டுகிறார். அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டுகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாலிபர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |