நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.