Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் இயக்கப்படுகிறதா….? பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 4 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இணையதளம் மூலமாக டிக்கெட் பதிவு செய்து பேருந்துகளை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி கோயம்புத்தூர் மாவட்ட இணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டு சென்ற 4 பேருந்துகளை கணியூர் சோதனை சாவடியில் வைத்து அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதன்பின் பேருந்து உரிமையாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் பயணிகளின் நலன் கருதி அந்த 4 பேருந்துகளை மட்டும் சென்னைக்கு இயக்க அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காந்திபுரம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல தயாராக இருந்த 15 தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

Categories

Tech |