கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தைக்கால் தெரு சின்ன மாரியம்மன் கோயில் பகுதியில் ஆயுதங்களுடன் 5 பேர் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரும் கருப்பு துணியால் முகத்தை மூடியிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பிடிபட்டவர்கள் குழந்தைவேலு, முருகன், அன்புமணி, மணிகண்டன் மற்றும் மணி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேரும் சேர்ந்து கொள்ளையடிப்பதற்காக திட்டம் தீட்டி வந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.