தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு இணையான அளவுக்கு பரிசோதனைகளும் நாளுக்குநாள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. அதன்படி தினசரி தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல அதிர்ச்சியான தகவல்கள் பரிசோதனையில் நிகழ்ந்து கொண்டே வருகிறது.
ஏனென்றால் ஏராளமான கொரோனா நோயாளிகள் தங்களது மொபைல் எண்ணை கூறாமல் தவறான எண்ணை பரிசோதனை செய்பவர்களிடம் கூறுகின்றனர். இதனால் தவறான செல்போன் எண்ணை தருவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி சென்னையில் அதிகளவு கொரோனா பாதித்தவர்கள் தவறான தொலைபேசி எண்களை தருவதாக சென்னை மாநகராட்சி புகார் அளித்துள்ளது. அதாவது, தினசரி 40 எண்கள் வரை போலியானவை என்றும், ஒரு சில எண்கள் தவறானது என்றும் கூறியுள்ளது. இவ்வாறு தவறான எண்களால் கொரோனா பாதித்தவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. சென்னை மாநகராட்சி மட்டுமின்றி தமிழகத்திலுள்ள பல நகராட்சி, பேரூராட்சிகளில் இதுபோன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது.