பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட சிறுத்தை பூனையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சின்காராவில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை பூனை ஒன்று தவித்துக்கொண்டிருந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனையை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றிவிட்டனர். அதன் பிறகு வனத்துறையினர் சிறுத்தை பூனையை பத்திரமாக வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.