குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதையடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து இணை ஆணையர் அலோக் குமார், “மத்திய ஆயுத காவல்படை வீரர்கள் வடகிழக்கு மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். எந்த சூழ்நிலை வந்தாலும் அதனை சமாளிப்பதற்கு எங்களிடம் படை உள்ளது” என்றார்.
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 3,022 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள 12 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, “குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தொடக்கத்திலிருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால், பொது சொத்துக்களை சேதப்படுத்துவதை கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார்.
டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டுவருகிறது. சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்கானித்து வருகிறோம், வன்முறையை தூண்டும் விதமாக பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.