Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

வீட்டின் மேற்கூரை இடிந்த விபத்தில் கூலி தொழிலாளியின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் கூலி தொழிலாளியான ஸ்ரீதேவன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஸ்ரீதேவன் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்ரீதேவனின் வீட்டு முன் பக்க அறையின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துவிட்டது.

அந்த சமயம் ஸ்ரீதேவனின் குடும்பத்தினர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் சபீர் கான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்துள்ளனர். மேலும் தாசில்தார் காயத்ரி ஸ்ரீதேவனுக்கு நிவாரண தொகையான ரூ.4100-ஐ வழங்கியுள்ளார்.

Categories

Tech |