அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளக்காக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் , உள்ளாட்சி தேர்தல் , புத்தாண்டு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நாளை முதல் ஜனவரி 1_ஆம் தேதி வரை என 12 நாட்களுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படக்கூடிய கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த விடுமுறை நாட்களில் பட்டியலிடப்பட்டு இருந்த அட்டவணை படுத்தப்பட்டு இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு , புதிய தேதிகளையும் அறிவித்திருக்கிறார்கள்.
நாளை சனிக்கிழமையும் தேர்வு அட்டவணைப்படுத்தப்பட்டு இருந்தது , அதே போல 23ஆம் தேதி , 24ஆம் தேதியும் தேர்வு அட்டவணை படுத்தப்பட்டு இருந்தது. இதில் கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அனைத்து தேர்வுகளும் ஜனவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு நடத்தப்படும் என தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
தொழில்நுட்ப கல்லூரி இயக்கத்திலிருந்தும் , கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து பல்கலைக்கழகம் என எல்லாவிதமான கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என நிலையில்தான் உயர்கல்வித்துறை செயலாளர் கடிதத்தில் எழுதி இருந்தார் , மேலும் ஒவ்வொரு கல்லூரிக்கும் தனித்தனியாக விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு ஒத்திவைப்க்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்வு குறித்த தேதி அறிவிப்ப்பை அண்ணா பல்கலைக்கழக இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.