Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“குப்பை கொட்டாதீர்” அரிசி மாவு மூலம் துப்பரவு பணியாளர்கள் விழிப்புணர்வு…… குவியும் பாராட்டு….!!

கடலூரில் குப்பை கொட்டுவதை தவிர்க்க அரிசி மாவு கொண்டு துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய  சம்பவம் அப்பகுதி மக்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் குப்பைகளை அகற்ற நகராட்சி பணியாளர்கள் அப்பகுதியில் அரிசிமாவு கொண்டு குப்பை கொட்டாதீர்கள் என்று புதுமையான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

மேல வீதியில் அமைந்துள்ள இந்த பள்ளியின் வளாகத்தில் மார்க்கெட் வியாபாரிகள் காய்கறிகள் மற்றும் பழ  கழிவுகளை கொட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. அதை உண்ணுவதற்கு மாடுகள் அங்கே சுற்றி திரிவதாகவும் அப்போது இந்த சாலையில் வாகன விபத்துகள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி பணியாளர்கள் இப்பகுதியில் குவிந்த குப்பைகள் முழுவதையும் அகற்றி சுத்தம் செய்ததோடு அரிசி மாவு கொண்டு குப்பை கொட்டாதீர் என்று எழுதியது  அப்பகுதி மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. 

Categories

Tech |