Categories
தேசிய செய்திகள்

ஆசிரியர்களுக்கு வரும் 22ஆம் தேதி முதல்…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகமாக பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதன் காரணமாக மத்திய அரசானது அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

கேரளாவை பொறுத்தவரையிலும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 22ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். ஆனாலும் ஆசிரியர்கள் தினசரி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றும், பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி கூறியுள்ளார். பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தற்போதைய அட்டவணையின்படி தொடரும். நேரடி வகுப்புகளின் நிலைமையை ஆய்வு மேற்கொள்ள வரும் திங்கட்கிழமை பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடடத்தப்பட உள்ளது. அத்துடன் கூடுதலாக கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தையும் நடத்த உள்ளது. கேரள மாநிலம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் வளாகத்தை ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில், கேரளாவில் நாளை முதல் பணிகள் தொடங்க இருக்கிறது. இந்த பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 967 பள்ளிகளில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |