அபுதாபியில் ட்ரோன் மூலமாக வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஐ.நா சபை கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கிருக்கும் எண்ணெய் நிறுவனத்திற்கு அருகில் இருந்த எரிபொருள் டேங்குகள் வெடித்துச் சிதறியது.
இந்த தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த 2 நபர்களும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் பரிதாபமாக பலியாகினர். மேலும் 6 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஐ.நாவின் பொது செயலாளரான அண்டோனியோ குட்டரெஸ் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.