ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே முனியப்பன் பகுதியில் செயல்பட்டுவரும் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றி வருவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமையில் விரைந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்த கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு குழந்தைகள் உட்பட 19 பேரை பத்திரமாக மீட்டனர். பின் அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்பு அவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.