நடிகை கனிகா, பயில்வான் ரங்கநாதன் தன்னை பற்றி ஆபாசமாக பேசியது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
நடிகை கனிகா கடந்த 2002ஆம் வருடம் வெளியான 5 ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து இவர் வரலாறு, ஆட்டோகிராஃப், எதிரி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரைப் பற்றி அவதூறாக பேசிய பயில்வான் ரங்கநாதன் பற்றி இவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ள கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் வில்லனாக நடித்து வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது பத்திரிக்கையாளராக உள்ளார். மேலும் இவர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் குறித்து கடந்த சில காலங்களாக பெரும் சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார்.
அந்த வரிசையில் சில தினங்களுக்கு முன்பு இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகைகள் பலர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து சினிமாவில் இடம் பிடிப்பதாகவும் மேலும் கிடைத்த இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவேற்றி வருவதாகவும் கூறியுள்ளார். அமலாபால், தமன்னா, ராஷ்மிகா, ஷாலினி பாண்டே மற்றும் கனிகா ஆகியோர் இவ்வாறு செய்து வருவதாக அவர் தன்னுடைய வீடியோவில் கூறியிருக்கிறார். இதனை பார்த்து கடும் கோபம் அடைந்த கனிகா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயில்வான் ரங்கநாதனை ஒரு போலி பத்திரிக்கையாளர் எனவும், இதுபோன்ற மூன்றாம்தர நபர்கள் வெளியிடும் வீடியோ குறித்து நான் எந்த புகாரும் அளிக்க விரும்பவில்லை எனவும், இதுபோன்ற வீடியோவை நான் கண்டு கொள்வதில்லை எனவும் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.