கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மூலவைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மூலவைகை ஆற்றின் பிறப்பிடமாக வெள்ளிமலை வனப்பகுதி திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனையடுத்து வருசநாடு அருகே உள்ள கடமலை-மயிலை கிராமத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகமானது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிக நீர்வரத்து காரணமாக கடமலைக்குண்டுவில் ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டு வரும் தடுப்பணை பணிகளும் பாதிப்படைத்துள்ளது.