Categories
மாநில செய்திகள்

சென்னையில் வாழும் 20 முதல் 29 வயது இளைஞர்களுக்கு…. அரசு எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா பரவல் விகிதம் 30 சதவீதமாக உள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிலும் குறிப்பாக 20 முதல் 29 வயதுடைய 20.89 சதவீதம் பேருக்கும், 30-39 வயதுடையவர்கள் 20.45 சதவீதம் பேரும், 50-59 வயதுடையவர்கள் 15.95 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் சென்னையை பொறுத்தவரை 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் இளைஞர்களைதான் கொரோனா அதிகளவு தாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |