மினி பஸ் டிரைவருக்கு அடி, உதை விழுந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கே.வி.கே. நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது முன்பு செல்ல வேண்டிய மற்றொரு மினிபஸ் அதற்கு உரிய நேரத்திற்கு பிறகு ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த மினி பஸ் டிரைவர் ரூபன் மற்றும் கண்டெக்டர் மாரிமுத்து ஆகியோரை மணிகண்டன் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த ரூபன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மத்தியபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.