சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்துங்கநல்லூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேல்பாண்டி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.