கள்ளச்சாராயம் வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நத்தக்காடையூர் அருகில் உள்ள சோழிமடை என்ற இடத்தில் செல்வராஜ் என்பவர் கள்ளச்சாராயம் வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் செல்வராஜின் வீட்டில் சோதனை செய்தபோது 5 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 2 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வராஜை கைது செய்ததோடு அவர் வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.