தேனி மார்க்கமாக சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பன் பக்தர்கள் வாகன நெரிசலை தவிர்க்கும் விதமாக கம்பத்திலிருந்து மாற்றுப்பாதையில் செல்ல திருப்பி விடப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்திலுள்ள சபரிமலைக்கு தேனி கம்பம் குமுளி வழியாக ஐயப்ப பக்தர்கள் செல்வதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதன் காரணமாக கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்தில் முன்பாக திருப்பி விடப்பட்டு கம்பம் வழியாக மேலப்பாளையம் கூடகோயில் சபரிமலைக்கு செல்கின்றன. அதேபோல் சபரி மலையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பும் வாகனங்கள் குட்டிகணம், பெரியாறு, குமுளி மற்றும் கம்பம் வழியாக தேனி பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.