Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக மண்ணை கவ்வும்!” …. மாஜி அமைச்சர் பரபரப்பு பேட்டி….!!!!

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுகவினர் நேற்று விருதுநகரில் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மிகப்பெரிய அளவில் சொதப்பல் செய்துவிட்டது.

மேலும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவோம் என்று கூறிவிட்டு தற்போது எதுவும் வழங்காமல் இருப்பது மக்களிடையே பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று கூறி பாண்டியராஜன் பரபரப்பாக பேசியுள்ளார்.

Categories

Tech |